ஒளிர் நிழல் 37 : அனுபவமும் ஆளுமையும்

அக்டோபர் 1978 ஆம் ஆண்டு அரசின் ஆறாம் படிவ சோதனையை முடித்திருந்தேன். நான் எழுதியது 5 பாடங்கள். அனைத்துமே கடுமையானவை. தேர்வு முடிவு கிடைக்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதேசமயம் ராம சுப்பையா உபகாரச் சம்பளம் ஒரு முடிவுக்கும் வந்திருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் விடைபெறும் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்கள் அவரவர் இல்லம் நோக்கி திரும்பினர். எனக்கு ஊர் திரும்ப எண்ணம் இல்லை. நான் அங்கேயே தங்கியிருந்தேன். ஏதாவது ஒரு வேலை செய்யலாம் என எண்ணம்.

Read More »

“சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!”

பசுபதி சிதம்பரம். ஒரு வழக்கறிஞர் என்ற அடையாளத்தையும் மீறி சமூக சேவையாளராகப் பலராலும் அறியப்பட்டவர். இந்நாட்டில் ஒவ்வொருமுறையும் தமிழர் வளர்ச்சிக்கான தடைகளும் சுரண்டல்களும் நிகழும்போது தன் வலுவான எதிர்க்குரலைப் பதிப்பவர். எழுத்து, அறிக்கைகள், ஆர்ப்பாட்டமான கோஷங்கள் என்றிருக்கும் தமிழர்களின் எதிர்ப்பின் வடிவத்திலிருந்து மாறுபட்டதாக அமைகிறது இவரது சமூகச் செயல்பாடுகள். அதிகார மையங்கள் செய்யத் தவறியதை, செய்ய மறந்ததை அல்லது மறுத்ததை பசுபதி தன் அறிவார்ந்த குழுவினரைக்கொண்டு மலேசியத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்து வருகிறார். வெற்றுச் சொற்களின் வடிவில் இவரது எதிர்ப்பின் வடிவம் இல்லாமல் துல்லியமான நகர்ச்சியால் அடுத்த தலைமுறையை இவர் உருவாக்க முனைந்திருப்பது ஆரோக்கியமான ஒரு எதிர்பார்ப்பை மலேசியத் தமிழர்களிடம் வழங்கியுள்ளது.

Read More »