ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 4

சகோதரர் Fan Yew Teng 1995 ஆம் ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு அமைதிக்காகப் போராடும் அரசு சாரா இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அமைதி என்பது இயல்பான ஒரு நிலை. ஆனால் பதவி பட்டம் மற்றும் மதவாத தீவிரத்தால் நிலைக்குழையும் நிலங்களில் அமைதியைக் கொண்டுவர இயக்கமாகப் போராட வேண்டிய நிலையில்தான் நாம்  உள்ளோம் என்பதை அவருடன் பேசியபோது தெளிவாகத் தெரிந்தது.

Read More »

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 2

தந்தை செல்வா

அந்தச் சனிக்கிழமைக்குப் பிறகு நான் பழனி, கந்தா ஆகியோரோடு அதிக உரையாடல்களை உருவாக்கிக் கொண்டேன். இலங்கையில் நடைபெறும் இனக்கலவரம் எங்கள் உரையாடலில் மையமாக இருந்தது. 

வடக்கு, வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக அரசுரிமை கொண்ட ஓர் இனமாக வாழ்ந்து வந்துள்ளனர். சோழர்கள் இந்த ஆட்சியின் மீது பலமுறை போர் தொடுத்துள்ளனர். சோழர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அரச தந்திர உறவுகள் இருந்ததற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. 

போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என மலாயா தீபகற்பத்தை மாறி மாறி கைப்பற்றி ஆட்சி செய்து 1957 இல் எப்படி சுதந்திரம் கொடுத்தனரோ அதே வரிசையில்தான் இலங்கையையும் இந்த மூன்று சக்திகளும் ஆட்சி செய்தன. 1948 ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. 

Read More »

ஒளிர்நிழல் 44: தெய்வத்தான் ஆகாதெனினும்…

ஆரம்பக்கல்வியைத் தமிழிலும் இடைநிலைக்கல்வியை ஆங்கிலத்திலும் பயின்றதால் மலாய் எனக்கு மூன்றாவது மொழியானது. ஆனால் நான் பயின்ற மலேசிய தேசிய பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தை முழுமையாக மலாய் மொழியில் வழிநடத்தியதுடன் தேர்வுகளும் மலாய் மொழியில் நடந்தது. பல்கலைக்கழகத்தில் நான் எதிர்க்கொண்ட முதன்மையான சவால் இது.

நான் தேர்ந்தெடுத்த இராசாயண தொழில்நுட்ப பாடத்தை மலாயில் படிப்பது பெரும் சிரமமாக இருந்தது. அத்துறைக்கான கலைச்சொற்கள் கைவரப்பெறாமல் தவித்தேன். இந்நிலையில்தான் முதல் தேர்வை எதிர்நோக்கினேன்.

Read More »

அப்பா என்ற நவீன மனிதர் – 30


என் அப்பா இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு தன் 15ஆவது வயதில் வேலை தேடி வந்தார். உறவினர்கள் யாருமில்லாமல் தனிமையில்தான் அவர் பயணம் தொடங்கியது. அவரது சின்னம்மாவின் குடும்பம் மட்டும் கிள்ளானில் வாழ்வதை அவர் அறிந்து வைத்திருந்தார்.  

அப்பா ஏன் மலேசியாவிற்கு வந்தார்? அந்தப் பயணம்  அனுபவங்கள்  எப்படி இருந்தன? அவருடைய புலப்பெயர்வின் பின்னணிதாப் என்ன? என்பது குறித்து நான் அவரிடம் கேட்டறிந்ததில்லை. தன்னந்தனியாக பத்து ஆராங் வந்து சேர்ந்த அவரது இந்திய பின்புலம் என்ன என்பது குறித்து கேட்டறியாததை எண்ணி நான் அவ்வப்போது வருந்துவதுண்டு. ஒருவர் இல்லாதபோதுதான் பொருட்படுத்தாமல் விட்ட அவர் குறித்த நுணுக்கமான தகவல்கள் காலத்தின் முன் பிரம்மண்டமாகிவிடுகிறது. 

Read More »

ஒளிர் நிழல் 27: அப்பா 2

ஜனவரி 1960 ஆம் ஆண்டில் பத்து ஆராங்கில் நிலக்கரி சுரங்கங்கள் முழுமையாக மூடப்பட்டன. அங்கு நிலக்கரி இரயில் ஓட்டுனராகப் பணியாற்றிய என் அப்பா, அதன் பின்னர் பகாங்கில் உள்ள இரும்பு சுரங்கத்திற்குப் பணியாற்றச் சென்றார். கடும் உழைப்பாளியான அவருக்கு எவ்வித கடுமையான வேலைகளைச் செய்வதிலும் மனத்தடை இருந்ததில்லை. 

1967 வரை அவர் இரும்புச்சுரங்கத்தில் இரயில் ஓட்டுனராகப் பணியாற்றினார். அந்தத் தொழிற்சாலையிலும் ஆட்குறைப்பு நடந்தபோது மீண்டும் பத்து ஆராங் திரும்பி வந்தவர், அங்கு இருந்த செங்கல் ஆலையில் ஈராண்டுகள் வேலை செய்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டில் மோரிப் மற்றும் தஞ்சோங் செப்பாட்டுக்கு இடையில் உள்ள காடோங் எனும் தோட்டத்தில் அமைந்திருந்த செம்பனை ஆலையில் கொதிகலன் பராமரிப்பாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு வேலையும் அதற்கேற்ற நுட்பங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை விரைவில் கற்று கையாளும் திறனை அப்பா கொண்டிருந்தார். 

Read More »

ஒளிர் நிழல் 26: அப்பா

என் அப்பா சிதம்பரம் ராமசாமி. தஞ்சை மாவட்டத்திலிருந்து 1930களில் மலாயாவுக்கு வேலை தேடி வந்தார். அவரது உறவினர்களும் ஊர்க்காரர்களும் ஏற்கனவே பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்ததால் கோலா கிள்ளான் துறைமுகத்தில் வந்து இறங்கியவுடன் நேராக பத்து ஆராங் வந்துவிட்டார்.

தமிழகத்தில் உள்ள ஒரு கிராம பள்ளியில் அவர் மூன்றாம் ஆண்டுவரைதான் படித்திருந்தார். எனவே சாதாரண உடல் உழைப்புத் தொழிலாளியாகவே அவர் தன் வேலையை பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் தொடங்கினார். அப்பா கடுமையான உழைப்பாளி. சுய முனைப்பால் படிப்படியாக நிலக்கரியை ஏற்றிச்செல்லும் ரயில் வண்டி ஓட்டுனராகத் திறன் பெற்றார். பத்து ஆராங்கில் தோண்டி எடுக்கப்படும் நிலக்கரியைச் சுமந்து செல்லும் ரயில், குவாங் சென்று அங்கிருந்து கோலாலம்பூருக்குப் புறப்படும். கோலாலம்பூரில்தான் வேண்டிய தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி விநியோகிக்கப்படும்.

இப்படி மெல்ல மெல்ல தன் நிலையை உயர்த்திக்கொண்ட அப்பா, 1950ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் உள்ள கம்பார் வட்டாரத்தில் வாழ்ந்த என் அம்மாவை மணமுடித்தார்.

Read More »

அம்மாவின் நான்கு குணங்கள்


இது என் அம்மாவைப்பற்றிய இறுதிப்பகுதி. இப்பகுதியை என் அம்மாவின் ஆளுமையைத் தொகுத்துக்கொள்ள முயல்கிறேன். அவர் எனக்குள் கடத்திய நான்கு முக்கிய குணங்களின் வழி அதை வரையறுக்க விரும்புகிறேன்.

தொண்டு என்பது பெயர்ச்சொல் அல்ல; அது ஒரு வினைச்சொல் என எனக்கு போதித்தவர் என் அம்மா. அதுதான் அம்மா எனக்குத் தன் செயல்களால் பயிற்றுவித்த முதல் பண்பு.

நாங்கள் சிரமத்தில் இருந்தபோது எங்களைவிட சிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருந்தார். எனக்கென்னவோ எங்கள் குடும்பம் அன்றி இன்னொரு குடும்பமும் பசியின்றி மகிழ்ந்திருக்க அவர் கூடுதலாக உழைத்தார் என்றே தோன்றும். அவர் தன் உலகை நான்கு சுவர்கள் கொண்ட ஒரு வீட்டுக்குள் சுருக்கிக்கொள்ளவில்லை.  உதவி தேவை உள்ளவர்களுக்கு பழைய Dutch Baby பால் டின்னில் நான்கு குவளை அரிசி, ஒரு குவளை சீனி, அரைக்குவளை மீன்கறி தூள் என அடைத்துக்கொடுப்பார். பத்துக்குவளை அரிசியில் இரண்டு குவளை அரிசி இன்னொரு குடும்பத்தின் தேவைக்குதான் செல்லும். அம்மா அதை மனமுவந்து செய்வார். உதவி செய்வதுபோலவே பெற்ற உதவிக்கு நன்றி உணர்வுடன் இருக்கும் பண்பை அவர் எப்போதும் கைவிட்டதில்லை.

Read More »