ஒரு புதிய தொடக்கமும்; ஓர் உருமாற்றமும் – 7

80,90 ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரிக்காத அமெரிக்கா, இந்தியா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்  அப்போராட்டத்தை உள்நாட்டு கலவரம் என்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் சித்தரிக்கத் தொடங்கின.  வங்காளதேசம் எனும் தனிநாட்டை உருவாக்கத் முன்னோடியாக இருந்த இந்தியா, மே 21, 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு எதிரான அகில உலக அரசியலில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியது. இந்திரா…

ஒரு புதிய தொடக்கமும்; ஓர் உருமாற்றமும் – 6

மனித உரிமை அத்துமீறல் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கைகளால் அவதியுறும்  தமிழ்மக்களின்  கண்டனத்தை தெரிவுபடுத்த மலேசியாவில் இயங்கி வந்த ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன் ஓர் அமைதி ஆர்பாட்டம் செய்ய எங்கள் குழு ஒரு முடிவெடுத்தது. Fan Yew Teng ஒரு கண்டன மனுவைத் தயார் செய்து தூதரக அதிகாரியிடம் கொடுக்க முடிவெடுத்தார். நாங்கள் மலேசியாவில் அக்காலக்கட்டத்தில் தீவிரமாக மனித உரிமைக்காகப் போராடும் மற்ற மனித உரிமை அத்துமீறல்களைக் கண்டிக்கும் அரசுசாரா இயக்கங்களைத் தொடர்புக்கொள்ள முடிவு செய்தோம். இரண்டு…

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 5

எங்களின் முதல் திட்டம் தமிழீழம் குறித்த தவறான செய்திகளையும் அதனால் உருவாகும் எண்ணங்களையும் அகற்றுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக  தமிழீழ தனிநாடு கோரிக்கைக்குச் சரித்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மலேசியர்களுக்குத் தெளிவை அளிப்பது. மூன்றாவதாக, தமிழீழ போராட்டத்திற்கு மலேசிய அரசு தரப்பில் ஆதரவைப் பெறுவது. அதே சமயம் மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளைச் சந்தித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வன்முறை தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடூரங்களை விளக்குவது எனும் முடிவுக்கு வந்தோம். ஐயா யோக…

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 4

சகோதரர் Fan Yew Teng 1995 ஆம் ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு அமைதிக்காகப் போராடும் அரசு சாரா இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அமைதி என்பது இயல்பான ஒரு நிலை. ஆனால் பதவி பட்டம் மற்றும் மதவாத தீவிரத்தால் நிலைக்குழையும் நிலங்களில் அமைதியைக் கொண்டுவர இயக்கமாகப் போராட வேண்டிய நிலையில்தான் நாம்  உள்ளோம் என்பதை அவருடன் பேசியபோது தெளிவாகத் தெரிந்தது. அவர் Centre for Peace Initiative (Cenpeace) எனும் அமைதிக்கான முன்னெடுப்பு மையத்தில் தீவிரமாக ஈடுபட்டு…

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 3

பான் இயூ தெங் (Fan Yew Teng) முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர். மிகவும் அமைதியான மனிதர். மானுட அமைதிக்கும் உரிமைக்கும் போராடிய சமூகவாதி பின்னர் அரசியலில் ஈடுபட்டு முக்கிய அரசியல் தலைவராகியிருந்தார். தனது ஐந்தாவது படிவத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்று இங்கிலாந்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகத் தொழில் செய்தார். ஆசிரியர்களுக்காகச் செயல்பட்ட தொழிற்சங்கமான National Union Of Teachers இல் தீவிரமாகப் பணியாற்றினார். 1967இல் இந்தச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சஞ்சிகையான Educatorஇல் பிரதான ஆசிரியராக…

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும் – 2

அந்தச் சனிக்கிழமைக்குப் பிறகு நான் பழனி, கந்தா ஆகியோரோடு அதிக உரையாடல்களை உருவாக்கிக் கொண்டேன். இலங்கையில் நடைபெறும் இனக்கலவரம் எங்கள் உரையாடலில் மையமாக இருந்தது.  வடக்கு, வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக அரசுரிமை கொண்ட ஓர் இனமாக வாழ்ந்து வந்துள்ளனர். சோழர்கள் இந்த ஆட்சியின் மீது பலமுறை போர் தொடுத்துள்ளனர். சோழர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அரச தந்திர உறவுகள் இருந்ததற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன.  போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என மலாயா தீபகற்பத்தை…

ஒரு புதிய தொடக்கமும் ஓர் உருமாற்றமும்

நான் என் வாழ்க்கை குறித்து எழுதிவரும் இந்தத் தொடரை ஆரம்பக்கால கல்வி, இடைநிலைக்கல்வி, பல்கலைக்கழக வாழ்க்கை என 1964 – 1984 வரை முதல் பகுதியாகப் பிரிக்கலாம். இரண்டாவது பகுதியாக 1984 – 1994 வரை நான் வேலை செய்த அரசாங்க பணி குறித்தும் அப்பணியில் அமர்வதற்கு முன்னர் செய்த பிற தொழில்களையும் அதில் இருந்த சவால்கள் குறித்து எழுதியுள்ளேன். மேலும் அரசாங்கப் பணியைத் துறந்து நான் வழக்கறிஞராக முயன்ற போராட்ட காலக்கட்டத்தையும் இப்பகுதியில் எழுதியுள்ளேன். 1994…

JOY : நன்றிக்கடன் எனும் ஆன்மிக அனுபவம்

மருத்துவர் கண்ணன் பாசமாணிக்கம் என் நண்பர். ஜொகூர் மூவாரில் பிறந்து வளர்ந்த இவர் அங்கேயே இடைநிலைப்பள்ளிவரைப் பயின்றார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று கிள்ளான் பள்ளத்தாக்கில் பிரபலமான இருதய மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் மை ஸ்கில்ஸ் வந்திருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களைப் பார்த்து பேசி நெகிழ்ந்தவர் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென எண்ணம் கொண்டிருந்தார்.  அது ஓர் அசாதாரண வருகைதான். Multiple myeloma எனும் எலும்பு மச்சை…

ஒளிர் நிழல் 54: சொல் கொல்லும்; சொல் வெல்லும்

அரசு சேவை உபகாரச் சம்பளம் பெற்று பட்டப்படிப்பை முடித்திருந்ததால் எனக்கு அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மேலும் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வேலைக்குச் சென்ற பத்து ஆண்டுகளிலேயே வழக்கறிஞர் துறையில் இரண்டாவது பட்டப்படிப்பைத் தொடர அரசாங்க வேலையே ஏற்றது. எனவே அவ்வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அதே சமயம் தனியார் துறையிலும் வேலைக்கு மனு செய்து நேர்முகத்தேர்வுகளுக்கும் சென்று கொண்டிருந்தேன். ஒருமுறை என்னுடன் ஐந்தாம் படிவம் பயின்ற சீன நண்பரை லெபோ அம்பாங்கில் சந்தித்தேன். அவர் ‘ஹாங்காங் சைனா’…

ஒளிர் நிழல் 53: காலமும் மனமும்

நான்  நண்பர் ப. மகேஸ்வரனுடன் பிரிக்ஸ் பில்டில் அவ்வப்போது தேநீர் சந்திப்புகள் நிகழ்த்துவது உண்டு.  சமுதாயம், சினிமா, தோட்டப்புற வாழ்க்கை என பலவற்றையும் ஒட்டி பேசுவோம்.  ப. மகேஸ்வரன் எனக்கு அறிமுகமானது என்னுடன் மலேசிய தேசிய  பல்கலைக்கழகத்தில் பயின்ற சுப்பிரமணியம் மூலமாகத்தான்.    ப. மகேஸ்வரன் சுவாரசியமான நண்பர்.  இப்போது மலேசிய சத்தியராஜ் என அழைக்கப்பட்டு கலைத்துறையில் மிகவும் பிரபலமாக திகழும் அவர் அப்போது கிரௌன் பசிபிக் என்ற நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். அவரிடம் பேசும்போதெல்லாம் அவரது…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

தளத்தைப் பின் தொடர மின்னஞ்சலை பதிவு செய்க